பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசுக்கு NCERT தனது வழிகாட்டுதல்களை சமர்பித்திருக்கும் நிலையில்.
வரும் டிசம்பர் மாதம் வரை கல்வி நிறுவனங்களை திறக்க வாய்ப்பு இல்லை என மத்திய உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறப்பு..வழிகாட்டுதல்கள் என்னென்ன ?
தொற்று நோயை தவிர்ப்பதுடன் பள்ளிகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த
வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர்
கேட்டுக்கொண்டதற்கிணங்க NCERT தயாரித்து சமர்பித்துள்ளது.
இதுவரை 15 மாநிலங்கள் பள்ளிகளை திறக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு கட்டங்களாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது:
- முதற்கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகள்.
- ஒரு வாரம் கழித்து 9 மற்றும் 10ஆம் வகுப்புகள்
- இரண்டு வாரங்களுக்குப் பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- அதன்பிறகு மூன்று வாரங்களுக்குப் பிறகு 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- நான்கு வாரங்களுக்கு பிறகு 1 மற்றும் 2ஆம் வகுப்புகள்.
- ஐந்து வாரங்களுக்குப் பிறகு, நர்சரி மற்றும் கே.ஜி வகுப்புகள்.
என திறக்க NCERT பரிந்துரைத்துள்ளது.
வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்கள்:
● ஒவ்வொரு குழந்தைக்கும் முகமூடி அணிவது அவசியம்.
● வகுப்பில் மாணவர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் இருக்க வேண்டும்
● ஒரு வகுப்பறையில் 15 முதல் 25 குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.
● குழந்தைகள் தங்கள் இருக்கைகளை மாற்ற கூடாது, அவர்களின் பெயர்கள் மேசையில் எழுதப்பட வேண்டும்
● வீட்டுபாடங்கள் தினமும் வழங்கப்படும்.
● வகுப்பறை கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து வைக்கப்படும், மேலும் ஏசி பயன்படுத்தப்படாது.
● பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.
● பள்ளிக்கு வெளியே உணவகங்கள் இருக்க கூடாது.
மாணவர்கள் பேனா, பென்சில் அல்லது உணவை பரிமாற கூடாது. மேலும் சொந்தமாக தண்ணீர்க் கொண்டு வர வேண்டும். *
தினமும் வகுப்பு அறைகள் சுத்திகரிக்கப்படுவதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்யவேண்டும்.
காலை கூட்டங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெற கூடாது.
இவற்றை நடைமுறை படுத்த மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையில் உள்ளது. இந்த மாத இறுதியில் வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்ப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...