நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து, தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.
நீட்
தேர்வு எழுதுவதற்காக இதுவரை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் பதிவு
செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தனது அட்டவணையில் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை காரணமாக வைத்து முதன்முறையாக ஐந்து முறை தேர்வு எழுதக்கூடிய
நபர்களுக்கு ஐயத்தை நீக்கி தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக
தேசிய தேர்வு முகமைவெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
நீட் தேர்வுக்கான நுழைவு அட்டைகளும் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும், 99.7
சதவீதம் தேர்வர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்டு தேர்வு செய்த மையங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை
வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும்
தேர்வு நேரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக மாநில தலைமைச் செயலாளர்கள்
மற்றும் டிஜிபி ஆகியோருக்கு விரிவான கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் தேசிய
தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...