தேசிய
கல்விக் கொள்கை தொடர்பாக கருத்துக்களை கூற மத்திய அரசின் கல்வித்துறைச்
செயலாளர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை
தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் முனைவர் அ.மாயவன்
முதலமைச்சருக்கு திங்களன்று ( ஆக.24 ) எழுதியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது : மாநில பட்டியலில் இருந்த கல்வி , தற்போது ஒத்திசைவுப்
பட்டியலில் இருப்பதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம்.
கல்வித்துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
ஒரே தீர்வு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
தேசிய
கல்விக் கொள்கை -2020 நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்படவில்லை. தமிழக
அரசும் இது தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவில்லை. தேசிய கல்விக் கொள்கையை
ஆராய அமைக்கப்பட்ட குழுவும் அதன் பணிகளை தொடங்கவில்லை. இந்நிலையில் ,
மத்திய அரசின் கல்விச் செயலாளர் , ஆசிரியர்கள் , பள்ளி , கல்லூரி
முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்த தங்களுடைய கருத்துக்களை ஆக.31
க்குள் நேரடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பது
ஆரோக்கியமான நடைமுறையல்ல. இது குறித்து ஆசிரியர்களக்கு முதலமைச்சர்
ஆசிரியர்களுக்கு , ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...