++ அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணி: ஜன.2, 3-ல் கலந்தாய்வு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 742 பேருக்கு 2 நாட்கள் கலந்தாய்வு  நடைபெற உள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிக்கு முதன் முதலாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான கலந்தாய்வு ஜன.2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது.


இந்தப் பதவிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 742 பேர் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து 742 பேருக்கும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரிசை எண் 1 முதல் 400 வரை இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 2 ஆம் தேதியும் வரிசை எண் 401 முதல் 742 வரை இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வர்களின் கல்விச் சான்றிதழ்களைக் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...