ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : " 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் " . 2 . தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் " . 3 . பள்ளிக் கல்வி இயக்குநர் தனது கடிதத்தில் , தமிழகத்தில் உள்ள அனைத்து வயது பள்ளி குழந்தைகளும் மேல்நிலைக் கல்வி வரை தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும் , பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தவும் , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி ஆணை வழங்குமாறும் , அப்பள்ளிகளுக்குத் தேவையான பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் . பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து , முதற்கண் 40 உயர்நிலைப் பள்ளிகளை , மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது : அ ) 2020-21 - ஆம் கல்வியாண்டில் இவ்வாணையின் இணைப்பில் உள்ள / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» Flash News : High School to Hr Sec School Upgradation - School List Published
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...