Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று வெளியாகிறது GATE 2021 தேர்வுக்கான அட்மிட் கார்டு - பதிவிறக்கம் செய்வது எப்படி?

1610108618744
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய் GATE 2021 தேர்வுக்கான அட்மிட் கார்டை இன்று (jan.,.8) வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத் தாக்கல் செயல்முறை மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் IIT GATE 2021 அட்மிட் கார்டை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான gate.iitb.ac.in -இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு பிப்ரவரி 6, 7, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அதன் முடிவுகள் மார்ச் 22ம் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

GATE 2021-க்கான ஹால் டிக்கெட்டில் விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதாவது விண்ணப்பித்தவர்களின் பெயர், தேர்வு தேதி மற்றும் நேரம், GATE தேர்வு மையத்தின் முகவரி போன்றவை இடம்பெற்றிருக்கும். GATE அட்மிட் கார்டு 2021-ஐ பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பித்தவர்கள் பதிவு செய்யும் போது உருவாக்கிய யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட்டை பயன்படுத்தி gate.iitb.ac.in இணையத்தில் உள்நுழைய வேண்டும். விண்ணப்பித்தவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும்போது GATE அட்மிட் கார்டு மற்றும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். எந்தவொரு மாணவர்களும் அடையாள அட்டை இல்லாமல் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

GATE 2021 அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1) உங்களுக்கு விருப்பமான பிரவுசரை ஓபன் செய்த பிறகு, GATE 2021 Admit Card என டைப் செய்து, அதில் தோன்றும் லிங்கை கிளிக் செய்யலாம். அல்லது gate.iitb.ac.in என்ற லிங்கை டைப் செய்து உள்நுழையலாம்.

2) வலைதள பக்கத்தின் முகப்பில் இருக்கும் "GATE Login" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3) அதில் உங்கள் பதிவு எண் (User Id) மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிடவும்

4) பிறகு திரையில் தோன்றும் "கேட் அட்மிட் கார்டு பதிவிறக்கம்" (GATE admit card download) என்று லிங்களை கிளிக் செய்ய வேண்டும்

5) உங்கள் அட்மிட் கார்டு திரையில் தோன்றும்

6) PDF ஃபைலை பதிவிறக்கி அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

யூசர் ஐடியை எவ்வாறு மீட்டெடுப்பது:

ஒருவேளை நீங்கள் உங்கள் யூசர் ஐடி-யை மறந்துவிட்டால், அதனை மீட்டெடுக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

1) “மறந்துவிட்ட யூசர் ஐடி” (Forgot Enrolment ID) என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

2) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை சமர்ப்பிக்கவும்.

3) யூசர் ஐடி விண்ணப்பித்தவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

பாஸ்வோர்டை எவ்வாறு மீட்டெடுப்பது?

ஒருவேளை நீங்கள் உங்கள் பாஸ்வோர்டை மறந்துவிட்டால் கீழ்காணும் வழிமுறைகளை பயன்படுத்தி அதனை மீட்டெடுக்கலாம்.

1) “OTP க்கான கோரிக்கை” என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

2) விண்ணப்பித்தவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்

3) OTP சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்பித்தவர்கள் தங்கள் பாஸ்வோர்டை மாற்ற முடியும்.

Also read... Gold Rate: அதிரடியாக குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

GATE (Graduate Aptitude Test in Engineering) 2021 தேர்வுக்கு மொத்தம் 8,82,684 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு GATE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 8.59 லட்சம் ஆக இருந்தது. அதனை ஒப்பிடும் போது இந்த வருடம் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு IIT இரண்டு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் மனிதநேய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மனிதநேய பாடங்களுக்கு மட்டும் மொத்தம் 14,196 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல, இந்த வருடம் GATE 2021 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 2,88,379 பெண் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 10,000 அதிகரித்துள்ளது. GATE தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஐ.ஐ.டி.களில் எம்டெக் படிப்புகளில் சேர தகுதி பெறுவார்கள். அதே போல் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive