ஜனவரி 28-ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்திருப்பதால், கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசால், ஜனவரி 28 பொது விடுமுறை நாளாக அறிவக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளில் திட்டமிடப்பட்ட நேர்முகத் தேர்வு ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28-ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டும் மேற்படி தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து www.tnpsc,gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் நேர்முகத் தேர்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...