தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில்
நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை
அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள்
மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை நடவடிக்கை
எடுத்துள்ளது. நாளையுடன் ஒப்பந்தம் முடிவிருந்த நிலையில் தமிழக அரசு
நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த
செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
2015- 2016-ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு
பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பணியில் 1212 பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் தற்போது கரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...