தற்போது அதன் தொடர்ச்சியாக , 2 முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள பயிற்சி புத்தகத்திலுள்ளவை ( Work Book ) அனைத்தும் காணொலிகளாக தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இணைப்பில் கண்ட கால அட்டவணையின்படி 11.05.2021 முதல் 18.06.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக பார்வையில் கண்ட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அடிப்பவர்கள் இப்பொருள் சார்பாக அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் மேற்கண்ட காணொலி காட்சியினை காண்பதற்கு உரிய தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது . மேலும் சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்து மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி புத்தகக் காணொலிகளை காண்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...