தலையங்கம்- அரசுப் பள்ளி வாத்தியார்கள் வேலை*
பொதுபுத்தியின் பார்வையாளர்கள் கவனத்திற்கு , ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுபவர்கள் கவனத்திற்கு .....
கடந்த
ஒராண்டாக வீட்டிலிருந்தே சம்பளம் வாங்குகிறார்கள் , என போகிற போக்கில்
மனசாட்சி இல்லாது பேசிவிட்டு போகும் கூட்டமே கொஞ்சம் இதனை முழுவதும்
படியுங்கள்...
*2020-21 ம் ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிகள்*
*கடந்த
2020 ஏப்ரல் , மே மாதங்களில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக கொரோனா நிவாரண
பொருட்களை( தங்கள் சொந்த பணத்தில்) எளிய மக்களுக்கு வழங்கியுள்ளனர்..*
*ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.*
*D.A , சரண்டர் உள்ளிட்ட பணபலன்களை இழந்துள்ளனர்.*
*பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ரேசன் கடை,போக்குவரத்து , கட்டுபாட்டு அறைகள் போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளனர்*
1.) லாக்டவுன் முடிந்து தளர்வுகள் வழங்கிய முதலாக சுதந்திர தின விழா கொடியேற்றுதல் நிகழ்வும், எளிய விழாவும் ... ( 15.08.2020)
2.) மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி ( ஆகஸ்ட் 30 வரை )
3.) மாணவர் சேர்க்கை ( கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாக மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.)
4.) பாடபுத்தகங்கள், நோட்டுகள் , விலையில்லா காலணிகள், சீருடைகள் அனைத்து மாணவர்கட்கும் வழங்கியது.
5.) செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் நடத்தியது.
6.) பள்ளிகளில் துப்புரவு பணி , கிருமிநாசினி தெளிக்கும்பணி என மறுகட்டமைப்பு செய்துள்ளனர்.
7.)
பாத்னா லிக்னா அபியான் எனும் திட்டம் எழுத படிக்க தெரியாத வயது
வந்தோருக்கான அடிப்படை கல்வி வழங்குகிறது , இதில் பள்ளி ஆசிரியர்கள்
முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.
8.) இதனிடையே மாணவர்களுக்கு தொலைபேசி , வாட்ஸ்அப், கல்வி டிவி வழியாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
9.) மீண்டும் இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் நோட்டுகளை மாணவர்களுக்கு விநியோகிப்பது.
10.) மாதா மாதம் சத்துணவு பொருட்களை சரியாக வழங்குவதை கண்காணிப்பது.
11.) எளிய முறையில் குடியரசு தின விழா
12.) மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே ஓவிய போட்டி , கட்டுரை போட்டி நடத்தி பரிசு வழங்கியது.
13.) செயல் ஆராய்ச்சி பயிற்சி மற்றும் ஏதேனும் ஒரு தலைப்பில் செயல் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள்.
14.) SAFETY & SECURITY பயிற்சி , ZERO COST TEACHING MATERIALS ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொண்டது.
15.) ஜனவரி மாதம் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு மேற்கொண்டது.
16.) INSPIRE AWARD , மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல் மற்றும் பெற்று வழங்கியது.
17.) மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றுதல்
18.) பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு கற்பித்தல் பணி , செய்முறை தேர்வு
19.) SHAALA SIDDHI உள்ளிட்ட ஆன்லைன் பணிகளை மேற்கொண்டனர்.
20.) பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். வண்ணமடித்தல், கட்டிட வசதி மேம்படுத்தல்....
21.) மார்ச் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் பயிற்சி 5 நாட்கள் , மற்றும் தொடர் 3 நாட்கள் தேர்தல் பணி .
22.) ஏப்ரல் மாத இறுதியில் BRIDGE COURSE WORK BOOK MODULE மாணவர்களுக்கு வழங்கி அதனை பின்பற்றி வருகின்றனர்....
23.) பதிவேடுகளை பராமரித்தல்
24.) 2021-22 பள்ளி குடியிருப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு
25.) இந்தாண்டு தேர்ச்சி வழங்குதல், டி.சி வழங்குதல், மாணவர் சேர்க்கை....
இன்னும் விடுபட்டது பல...
எப்போது லாக்டவுன் தளர்த்த பட்டதோ அப்போதிருந்தே ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று தான் வருகின்றனர்.
சும்மா வாய்க்கு வந்தத பேசி ஏற்கனவே நொந்து போன வாத்தியாருக பாவத்துல விழாதீக மக்கா...
Superrrr sir..
ReplyDeleteNice
ReplyDelete