பகுதி நேர ஆசிரியர்கள்:
கடந்த வருட கொரோனா பரவலில் இருந்தே நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அதில் இருந்து மீள முயற்சித்து வரும் வேலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆசிரிய பணியில் உள்ளவர்களுக்கு கற்பித்தல் பணி இல்லாததால் ஊதியம் இன்றி சிரமப்படுகின்றனர். கொரோனா பாதிப்பால் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது. இதனை கருத்திற்கொண்டு தெலுங்கானா அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவி தொகையாக ரூ.2000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்கியது. இதனை தொடர்ந்து தமிழக தனியார் பள்ளி ஆசியர்களும் அதே போல் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அனைவர்க்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றன.
இவர்களுக்கு 11 ஆண்டுகளாக மே மாதத்தில் கோடை விடுமுறைக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் சம்பளம் வழங்கவில்லை. பிறகு தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தி கொண்டு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மே 1 முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் இல்லை என்பதால் அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் வீட்டு தேவைகளை சமாளிப்பதற்கு கடினமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியின்றி தவிக்கிறோம் என கூறினர். இதனால் அரசு கோடை கால விடுமுறைக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...