இதன்படி
1. ஏற்கனவே ரேபிட் ஆட்டிஜென் சோதனை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானால் அவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய தேவை இல்லை.
2. ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கொரோனா உறுதியானால் அவர்கள் மீண்டும் சோதனை செய்ய வேண்டியது கிடையாது.
3. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் இல்லையென்றால் சோதனை செய்ய வேண்டாம்.
4. கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
5. ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்கிறார்கள். இது முழுவதுமாக நீக்கப்படலாம்.
நாட்டில் தற்போது மொத்தம் 2506 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருக்கின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய பரிசோதனைகள் வருவதால் உடனடியாக சோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதாவது: தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மிகுந்த சவாலை எதிர்கொண்டுள்ளன. அசாதாரண பரிசோதனை எண்ணிக்கை காரணமாக ஆய்வகங்கள் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. மேலும் ஆய்வகத்தில் பணிபுரியும் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனையை மேம்படுத்துவதும் ஒரே நேரத்தில் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பரிசோதனை கிடைப்பதை அதிகரிப்பதும் கட்டாயமாகும். அளவுக்கதிகமான பரிசோதனை எண்ணிக்கைகளால் சிக்கி தவிக்கும் ஆய்வகங்களுக்கு உதவும் வகையில், ரேபிட் ஆன்டிஜென் சோதனையை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் நகரங்கள், நகர்கள், பள்ளிகள், கல்லூரிகள் , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் சோதனையை அனுமதிக்க வேண்டும்.
தனிநபர் ஒருவர் ஆன்டிஜென்ட் சோதனையில் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொரோனா அறிகுறிகளால் கண்டறியப்பட்டால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் பரிசோதனை செய்யப்படுவோரின் படிவத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...