NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள்: அலட்சியம் காட்டக்கூடாத அறிகுறிகள் என்னென்ன..??

கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள்: அலட்சியம் காட்டக்கூடாத அறிகுறிகள் என்னென்ன..??

கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னும், கொரோனா ஏற்படுத்திய தாக்கம் உடலில் அப்படியே இருக்குமென்கிறார்கள் மருத்துவர்கள். அந்த தாக்கத்தை எதிர்த்து போரிடும்போது, ஒரு சில அறிகுறிகளை உதாசீனப்படுத்தக்கூடாதென அவர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றை இங்கு விரிவாக பார்க்கலாம்.


கொரோனா பாதிப்பும் பரவலும் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வரும் இதே நேரத்தில், கொரோனாவிலிருந்து குணமடைவோருக்கான விகிதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
 இருப்பினும், கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னரும் கொரோனாவின் தாக்கம் உடலில் இருந்துக்கொண்டே இருக்கிறதென்பதும் மறுக்கமுடியாது.
 நீண்ட கால கொரோனா போராட்டத்தில், ஒருசிலருக்கு 'நீண்ட கால உடல் நல குறைப்பாடுகள்' எனப்படும், வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில், மிக தீவிர பாதிப்பு ஏற்பட்டு - பின் குணமானவர்களுக்குத்தான் நீண்ட கால கொரோனா சிக்கல்கள் ஏற்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில், லேசான பாதிப்பு ஏற்பட்டு குணமாகும் நபர்களுக்கும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவது நிரூபனமாகியுள்ளது.
இப்படியானவர்களுக்கு, வழக்கமான கொரோனா சார்ந்த இருமல் - மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் மட்டுமில்லமல், வாழ்வியல் பாதிப்புகளான சர்க்கரை நோய் ஏற்படுவது - நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகிவிடுவது - ஹார்மோன் பிரச்னைகள், மாரடைப்பு, இதய நோய் பிரச்னைகள், சிறுநீரக பாதிப்புகள், . மறதி மற்றும் தெளிவற்ற மனநிலையில் இருப்பது, தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. 
இவற்றில், மறதி - தெளிவற்ற மனநிலை - தசைப்பிடிப்பு போன்றவை நீண்ட காலம் நோயாளியை பாதிக்கிறது என சொல்லப்படுகிறது.
இவை அனைத்தையும் விட, மனம் சார்ந்த சிக்கலே மிக மோசமாக இருப்பதாக என்றும் சொல்லப்படுகிறது. 
இவற்றையெல்லாம் தவிர்க்க, கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னரும் தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவிலிருந்து குணமடையும் நபர்களில், நான்கில் ஒருவருக்கு நீண்ட கால கொரோனா சிக்கல் ஏற்படுவதாக தெரிகிறது. 
ஆகவே கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னரும், ஒருவர் தொடர்ச்சியாக தன் உடல்நலன் மீது கவனம் கொண்டு செயல்பட வேண்டும்.
கொரோனாவுக்கு பின்னான பாதிப்புகளில், அடிக்கடி பசி எடுப்பது - தாகம் எடுப்பது - சருமம் வலுவிழந்து இருப்பது - சோர்வு அதிகம் இருப்பது - அதீத பசி - உடலிலுள்ள காயங்கள் ஆறாமல் இருப்பது - தலைச்சுற்றல் - உடல் அடிக்கடி கூசுதல் போன்ற அறிகுறிகள் தெரியவந்தால், அந்நபர்கள் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை செய்துப்பார்த்துக் கொள்ளவும்.
இதய துடிப்பு சீரற்று இருப்பது, இதய அழற்சி, ரத்தம் கட்டுவது, மாரடைப்பு ஏற்படுவது போன்றவை, கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னர் பலருக்கு ஏற்படுவதாக, இதய நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 இதை தடுக்க, நெஞ்சு பிடிப்பு, தோள்பட்ட வலி, வியர்வை, மூச்சுத்திணறல், கட்டுப்படுத்த இயலாத வகையிலான ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவை தெரியவந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, பாதம் வீங்குவது, உடல் எடை குறைதல், செரிமானப் பிரச்னை போன்றவை தெரியவருபவர்கள், சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive