NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைப்பா…? – கல்வி அமைச்சர் விளக்கம்!

 

 
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை, அரியமங்கலம் குப்பை குடோன், சத்திரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…….திருச்சி சத்திரம் பேருந்து நிலைய டெர்மினல் ஒன் பணிகள் ஜுன் மாதம் முடிவடைந்து விடும். டெர்மினல் டூ பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வந்துவிடும். அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் போது பேருந்துகள் இந்த டெர்மினல்களுக்குள் வந்து 3 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்ட பின்னர் செல்லும் வசதி அமையும். 
 
 


53 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடைகள் அமைத்தவர்களுக்கு தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். போக்குவரத்து இடையூறின்றி மக்களுக்கு உபயோகமான பேருந்து நிலையமாக இந்த சத்திரம் பேருந்து நிலையம் இருக்கும். அரியமங்கலம் குப்பை குடோனில் நாள் ஒன்றுக்கு 1500 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்குள் குப்பைககள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடும். வாட்ஸ் அப் மூலம் 100 சதவீதம் மாணவர்களை தொடர்பு கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் உள்ளது.

 நிறைய மாணவர்களிடம் இன்னும் ஸ்மார்ட் போன் கூட இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் மாணவர்கள் படிப்பறிவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அலகு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல் வருகிறது. இது குறித்த முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Source: https://www.etamilnews.com/education-minister/




5 Comments:

  1. நல்லா வரும் மாண்புமிகு அவர்களே ,இதற்குதான் கடந்த 10 ஆண்டுகளாக எதிப்பார்த்துஉழைத்து கொண்டிருந்தோமா? ஓவர் அக்டிங் பண்ணிங்கனா உரு தெரியாம போயிடுவீங்க, வரம் கொடுத்தவங்கதலையிலே கைவச்சா என்னவாகும் சிந்திதித்து பேசுங்க.

    ReplyDelete
    Replies
    1. அட நாரக்கூதி துளசி சும்மா வெட்டியா உட்கார்ந்துகிட்டு ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பாடம் நடத்தி விட்டு சும்மா தூங்கிவிட்டு அரசியல் கதை பேசிவிட்டு வட்டிக்கு விட்டு விட்டு மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் எத்தனையோ அரசு ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள் கடந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் கவலை பற்றி சிந்திக்காமல் முழு ஊதியத்தையும் வாங்கி மக்கள் வாயில் மண்ணை அள்ளிப் போட்டா எடப்பாடி அதே தவறை ஸ்டாலின் செய்யக் கூடாது உடனடியாக பணிக்கு செல்ல அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் ஒன்றரை வருடமாக ஓசி ஆகவே சம்பளம் வாங்கி விட்டார்கள் எனவே உடனடியாக வாழ்வாதார படியாக பள்ளி கல்லூரிகள் துவங்கும் வரை பள்ளி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதம் இருக்கும் பணத்தை பொது மக்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் ஊதியமாக ஒவ்வொரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்

      Delete
    2. எல்லா இலவசமும் போக பத்தாயிரம் எதுக்கு? வீட்டில் உக்காந்து ----கவா?

      Delete
  2. வேலையில் இருக்கும் போதே பென்ஷன்!

    ReplyDelete
  3. பள்ளியை திறங்க பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்க.

    சம்பளத்தை வாங்கி சுவிஸ் வங்கியில் போடவா போறோம் ? இங்க இருக்கிற மளிகை கடையில் வாங்கபோறோம், இங்க இருக்கிற கடையில் தான் செலவளிக்கபோறோம். இங்கதான் பெட்ரோல் போடபோறோம் இங்கதான் காய்கறி வாங்க போறோம்.

    ஊரை அடிச்சு உலையில் போட்ட உங்க உரு கவுன்சிலரை பொய் பாருங்க.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive