தேர்வுகள்
தள்ளிவைப்பு: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் முழு
ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு போன்றவை
அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடுகளையும் விதித்து
வருகிறது. இதனால் நாட்டில் நடக்க இருந்த நுழைவுத்தேர்வுகள்,
பல்கலைத்தேர்வுகள், பள்ளி இறுதி தேர்வுகள் போன்ற அனைத்தும்
தள்ள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்தும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளதால் முன்னதாக இரண்டு வாரங்கள் அமலில் இருந்த முழு ஊரடங்கு தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை இரண்டு வாரங்கள் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, மே 15ம் தேதி முதல் நடக்க இருந்த தேர்வு அட்டவணை தள்ளிவைக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்படும். மேலும், தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. பல்கலையின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்வு பற்றிய புதிய தகவல்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு தொடர்பாக சமூக வலைதளைங்களில் பரவும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...