NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வி செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து ஆசிரியர் கூட்டணி முறையீடு!

.com/

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர்     திரு.சு. பக்தவச்சலம் அவர்கள் சென்னை மாவட்ட தலைவர் திரு. சாந்தகுமார் அவர்கள் மாவட்ட செயலாளர் திரு.சீனிவாசன் அவர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு செயலாளர் மதிப்புமிகு.முனைவர் உதயசந்திரன் அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 கோரிக்கை விபரம் :

1.பள்ளிக்கல்வி ஆணையர்   பணியிடத்தை பரிசீலித்து இயக்குநர் பணியிடத்தை ஒருபோதும் மாற்றம் செய்திடவேண்டாமென்று வேண்டுகிறோம்.

2.புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்து விட்டு மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு ஒரு ஆணையம் அமைக்க வேண்டுகிறோம்

3.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை இந்த மாதமே பிடித்தம் செய்திட அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.

4 கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டும், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்பட வில்லை எனவும் அதோடு பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம் செய்யவில்லை எனவும் கோரிக்கை வைத்தோம்.அதனை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை செயலர் மதிப்புமிகு. முனைவர். உதயசந்திரன் அவர்கள் உடனடியாக DSC வசம் தொடர்புகொண்டு எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எவ்வளவு பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று விசாரித்தார் ..நமது சார்பாகவும் பாதிக்கப்பட்ட அதாவது இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலையும் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு* கேட்டுக் கொண்டுள்ளார். உடனடியாக சரி செய்வதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார்.

5. 2011க்கு பிறகு பணியில் நியமனம் செய்யப்பட்டு  TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உட்பட எந்த பலன்களும்  பெறாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மாண்புமிகு.கழக ஆட்சி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் . அதையும் விரைவில் செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 குறிப்பு :

சஸ்பெண்ட், பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை மாவட்ட கழகம் சேகரித்து மாநில கழகத்திற்கு காலை பத்து மணிக்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்

தகவல்

திண்டுக்கல் மு.முருகேசன்

மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்





2 Comments:

  1. 2012-TET இல் 83 மதிப்பெண், 5% தளர்வு இல்லை, அதனால் வேலை இல்லை,
    2013-TET இல் 92 மதிப்பெண், MP தேர்தலை முன் வைத்து 5% தளர்வு அளித்து விசித்திரமான வெய்ட்டேஜ் முறையால் வேலை கிடைக்கவில்லை. நீதி மன்றமும் இது அரசாங்க கொள்கை முடிவு என்று கை கழுவியது. 2013-இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2020-க்கு பின் அதாவது 7 வருடம் கடந்த பின் TET - இன் தேர்ச்சி ஆயுள் முழுவதும் செல்லும் என்ற ADMK அரசு ஆசிரியர் நியமனம் 40 வயது கடந்தவர்களுக்கு கிடையாது என்று சொல்லி எங்கள் வாழ்க்கையில் மண்ணை வாரி போட்டு விட்டது. முதல்வர் ஸ்டாலின் அய்யா எங்கள் மீது கருணை கொண்டு வயது வரம்பை பழையபடி மாற்றி ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்க பட்ட நபர்களை பணியில் அமர்த்திட வேண்டும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  2. முனைவர் உதயச்சந்திரன் அய்யா அவர்கள் சமச்சீர் கல்விக்காகவும் வெய்ட்டேஜ் முறையை நீக்கவும் கல்வி துறையை சீர்படுத்தவும் எடுத்த அத்தனை முயற்சியையும் கெடுத்து அய்யா உதயச்சந்திரன் அவர்களை ஒதுக்கியது ADMK அரசு. தற்போது அய்யா அவர்கள் நேரிடையாக முதல்வரிடம் எடுத்து சொல்லக்கூடிய பதவியில் உள்ளமையால் எங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive