ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் டேட்டா நன்மையை தவிர பல்வேறு கூடுதல் சலுகைகளையும் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.
ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக
மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில்
அதிக டேட்டா தரும் திட்டங்களை
வைத்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும்
டேட்டா நன்மையை தவிர பல்வேறு
கூடுதல் சலுகைகளையும் வழங்கி வருகிறது ஜியோ
நிறுவனம்.
இந்நிலையில்
ஜியோ நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு
இரண்டு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. இந்த
சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும்
வகையில் இருக்கும். இப்போது அந்த இரண்டு
சலுகைகளைப் பற்றி சற்று விரிவாகப்
பார்ப்போம்.
அதாவது
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில்
பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில், ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் இலவச
அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான சலுகையை
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்குவேண்டி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் ஜியோ நிறுவனம் கைகோர்த்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள முதல் சலுகை என்னவென்றால்,
இந்த கொரோனா பெருந்தொற்று காலம்
நீடிக்கும் வரை ஜியோபோன் வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள
முடியும்.
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இரண்டாவது சலுகை என்னவென்றால், ஜியோபோன்
வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான திட்டம்
அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜியோ அறிவித்துள்ள இரண்டாவது சலுகையைப் பற்றி விரிவாக கூறவேண்டும்
என்றால், ரூ.75-க்கு ஜியோபோன்
வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்
கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும், ரீசார்ஜ்
செய்ய இயலாத நிலையில் இருக்கும்
ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 300 இலவச நிமிடங்களை தருகிறது ஜியோ நிறுவனம். கண்டிப்பாக
இந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும்
வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...