12th Public Marks கணக்கீட்டில் மாற்றம் தேவை: கல்வியாளர் காயத்ரி பேட்டி

“தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கணக்கிடும் முறையில் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்காத வகையில் மாற்றம் வேண்டும்” என கல்வியாளர் காயத்ரி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

கொரோனாவால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் 50 சதவீதம், பிளஸ் 1ல் (எழுத்து தேர்வில் மட்டும்) 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு 30 சதவீதம் என கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் 30 சதவீதம், பிளஸ் 1ல் 30 சதவீதம், பிளஸ் 2ல் 40 சதவீதம் என்ற முறையில் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விரண்டு மதிப்பீடும் மாறுபட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 50 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாநில மாணவர்களுக்கு பிளஸ் 1ல் மிக குறைவாக 20 சதவீதம் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ.,யில் அது 30 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பங்களிப்பு 50 சதவீதம் என்பதை குறைத்து அதற்கு பதில் பிளஸ் 1க்கு கூடுதல் சதவீதம் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அரசு கல்லுாரி, பல்கலைகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படும்.

மேலும் மதிப்பெண்ணில்'உடன்பாடு இல்லையென்றால் சிறப்பு தேர்வு எழுதலாம்' என்ற அறிவிப்பும் குழப்பமாக உள்ளது. தேர்வு எழுதும் நிலையில் எந்த மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் என்ற மாணவர்களின் சந்தேகத்திற்கும் அரசிடம் பதில் இல்லை.

எனவே ஏற்கெனவே 'இம்ரூவ்மென்ட்' என்ற தேர்வில் இருந்த நடைமுறையான எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் உள்ளதோ அதை கணக்கிடும் வகையில், மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் என்றார்.





2 Comments:

  1. 𝒀𝒆𝒔 𝒄𝒐𝒓𝒓𝒆𝒄𝒕

    ReplyDelete
  2. plz apdi edhuvum pannatheenga 11th la mark romba kammi ipo irukura indha mark statement eh ok thaan apdi change panradha irundha 11th mark consider panna vendaam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive