168 மாணவர்களை சேர்த்து அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி!

686560

கரூர் மாவட்டம் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நிகழாண்டில் 168 மாணவர்கள் சேர்ந்துள்ளதால், இப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 525 ஆக உயர்ந் துள்ளது.

கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. 2002-ம் ஆண்டில் வெறும் 5 மாணவர் கள் மட்டுமே பயின்று வந்த இப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக இரா.விஜயலலிதா பொறுப் பேற்றார். அவரின் கடின முயற்சி, உழைப்பால் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக கணிச மாக அதிகரித்தது. கணினி, டைல்ஸ், மின் விசிறி, சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் படிப்படியாக ஏற்படுத் தப்பட்டன.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழி கல்வியும் தொடங்கப்பட்டது. இதற்காக பள்ளியில் கூடுதல் கட்டிடமும் கட்டப்பட்டது. பள்ளியின் சிறப் பான செயல்பாடு காரணமாக, சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங் களிலிருந்து தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள், இப்பள்ளியில் சேரத் தொடங்கினர். இதையடுத்து, மாணவர்கள் வந்து செல்ல வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சேரும் மாண வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தபோதும், போதிய இடவ சதியின்மை காரணமாக கடந்த இரு ஆண்டு களாக மாணவர் சேர்க்கை குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தற்போது பள் ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாலும், கரோனா ஊரடங் கால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளி களில் சேர்க்க ஆர்வம் காட்டு வதாலும், நிகழாண்டு கூடுதலாக மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இப்பள் ளியில் கடந்த 14-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், நேற்று வரை 1-ம் வகுப்பில் 70 பேர், 2-ம் வகுப்பில் 28 பேர், 3-ம் வகுப்பில் 30 பேர், 4-ம் வகுப்பில் 22 பேர், 5-ம் வகுப்பில் 18 பேர் என மொத்தம் 168 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மேலும், மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர்.

பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் உள்ள நிலையில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.விஜய லலிதா கூறியது: பள்ளியில் தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்படுவதால் நிகழாண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை புதிதாக 168 பேர் சேர்ந்துள்ளதால், மொத்த மாணவர்களின் எண் ணிக்கை 525 ஆக உயர்ந்துள் ளது. இதனால், இனி மற்ற வகுப்பு களுக்கு மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டு, 1-ம் வகுப்பில் மட்டும் இன்னும் 10 மாணவர்கள் வரை சேர்க்கைக்கு அனுமதிக்கலாம் என திட்டமிட்டுள்ளோம் என்றார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive