Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் ஆலோசனை?

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தமிழகத்தில், 2019 டிசம்பரில், 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக, 2020 ஜனவரியில் பதவி ஏற்றனர். ஆனால், ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுடன், இம்மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, செப்., 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், வீட்டில் இருந்தபடியே, பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், 100 சதவீதம் பணிக்கு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால், தேர்தலை ஆறு மாதம் தள்ளிப்போடும் வகையில், உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம், சமீபத்தில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்த பணிகளில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive