60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

பள்ளிக் கட்டிடங்கள் மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட வழிகாட்டுதல் அறிவுறுத்தல்களை கடைபிடித்தல் சார்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் செயல்முறைகள்!

வழிகாட்டுதல்கள் :

1. உயரம் அதிகமுள்ள அல்லது தனியாக உள்ள பள்ளி கட்டடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டடமைப்புகளில் மின்னல் மற்றும் இடி தாங்கியின் தேவை உள்ளதை ஆய்வு செய்தல் வேண்டும்.

2. கட்டட வடிவமைப்பாளர் ( architect ) , கட்டட அமைப்பாளர் ( the builder ) , மின்னல் மற்றும் இடி தாங்கி பொறியாளர் ( the lightning protective system engineer ) , மற்றும் சார்ந்த மின்னல் மற்றும் இடி தாங்கி அமைத்திடும் அதிகாரிகளுக்கிடையே கட்டட வடிவமைப்புகளின் போது தொடர்பு வைத்திருத்தல் வேண்டும்.

3. பள்ளிகளை பொருத்தமட்டில் பொருட்கள் வைப்பறை ( Stores Room ) மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள் இவற்றில் அதிக பாதிப்பிற்குள்ளாகும் டங்களை ஆய்வு செய்தல் வேண்டும்.

4. மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது அதிகமான நபர்கள் கூடும் இடங்கள் மற்றும் அடிக்கடி மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வரும் இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 
5. பள்ளி வேலை நேரங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும் .

6 , பள்ளி வளாகத்தில் மின்னல் மற்றும் இடியின் காரணமாக சேதம் அடைந்த பள்ளி கட்டமைப்புகள் அல்லது மரங்கள் இருப்பின் இது குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தெரிவித்திட வேண்டும்.

7. பள்ளி வேலை நேரங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்காத வகையில் உறுதியான கான்கிரீட் கூரை அமைக்கப்பட்ட வகுப்பறை / கட்டடத்தில் அமர்த்தப்பட வேண்டும்.

8. இடிதாங்கி அமைக்கப்பட தேவை இருப்பின் அதனை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை சார்ந்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலரிடம் தெரிவித்திட வேண்டும்.

மேலும் மேற்கூறியவற்றை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அனைத்து பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வினை வழங்கிட மாவட்ட அளவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இப்பொருள் தொடர்பான விவரங்களை தொகுத்து இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான ( NDMA ) காலாண்டு அறிக்கையுடன் கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித்திட்டம் ) அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ( idnsed@nic.in ) இணைத்து அனுப்பிவைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMG_20210625_063852


IMG_20210625_063903




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive