Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறு நியமன தேர்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்!

 

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கடந்த 28-ஆம் தேதி முதல் சென்னை DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

5 அம்ச கோரிக்கை :

.com/img/a/

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான " மறு நியமனத் தேர்வு ” என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்ய வேண்டும்.

கடந்த " 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை - 177 ஐ " உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

9 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

பின்னடைவு காலிப்பணியிடங்கள் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் அதிகரித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப , அதற்கான புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கப்பட வேண்டும்.

இட ஒதுக்கீடு " முறையை சரியாக பின்பற்றி ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்.

T.E.T மதிப்பெண் மற்றும் EMPLOYMENT SENIORITY cum T.E.T SENIORITY ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.

இதுவரை 2013 , 2014 ( Special Teachers for Physically Challenged ) , 2017 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடப்பட வேண்டும்.

தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 - லிருந்து 58 - ஆக அதிகரிக்க வேண்டும் மற்றும் ஓய்வு பெறும் வயது 60 - லிருந்து 58 - ஆக குறைக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

சாகும்வரை பரீட்சை எழுத வேண்டுமா

வருஷத்துக்கு ஒரு ஜீ. ஓ போடுறாங்க?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மனக்குமுறல்

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 28-02-2022 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்

மு.புகழேந்தி தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவருடன் ஏழுமலை,ரவி, பலராமன்,சசிகலா, தவமணி,பொன்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.புகழேந்தி செய்தியாளரிடம் கூறுகையில்,

கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ல் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 

-149 நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும், முதல்வர் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக செய்தியாளரிடம் தெரிவித்தார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive