NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித் துறை - 31.3.2022 மதுரை மண்டல ஆய்வுக்கூட்டத்தின் நிறைவுச் சுருக்கம்

 1. மாணவர்கள் வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருக்கவேண்டும். (LSRW முறைப்படி) 

 முதல் வகுப்பில் வார்த்தைகள் வாசிக்க வேண்டும்.

இரண்டாம் வகுப்பில் சிறு சிறு வாக்கியங்கள் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வார்த்தைகள் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் சரளமாக வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

மூன்றாம் வகுப்பு முதல் சொல்வதைக் கேட்டு, தமிழும் ஆங்கிலமும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

அடிப்படைக் கணக்குகள் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.


2. தொடக்கநிலை முதல் உயர்நிலை வரை TLM பயன்படுத்தி நடத்த வேண்டும்.

அதிகமாக Chart பயன்படுத்துவதை மட்டுமே TLM என கூறக்கூடாது. பெரும்பாலும் Chart -ஐ தாண்டி objects TLM அதிகம் பயன்படுத்த வேண்டும்.


3. கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு , remedial teaching அல்லது Coaching அவசியம். அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகவும் முக்கியமானது.


4. தொடக்கநிலையில் மாணவர்களிடம், ஆசிரியர்கள் parental அன்புடன் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். மாணவர்கள் அச்சமின்றி ஆசிரியரிடம் கலந்துரையாடி படிக்க வேண்டும்.


5. எல்லா மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எந்த மாணவரும் புறக்கணிக்கப்பட்டுவிடக்கூடாது. மாணவர்களிடம் பாரபட்சமற்ற அணுகுமுறையில் கற்றல் கற்பித்தல் நடைபெறவேண்டும்.


6. தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்கானித்து பதிவு செய்ய வேண்டும்.( கண்காணிப்பு பதிவேடு) இது தொடர்பாக உதவி ஆசிரியர்களிடம் நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி சிறந்த கற்றல் கற்பித்தலுக்கு வழிவகுக்க வேண்டும்.


7. வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டு, பிழைகளை கவனித்து, தேதியுடன் திருத்தப்பட  வேண்டும்.


8 - பாடக்குறிப்பேடுகள், கட்டுரை நோட்டுகள் மிக கவனமுடன், தேதியுடன் திருத்தப்பட வேண்டும்.


9. எட்டாம் வகுப்பு முடிய அனைவரும் தேர்ச்சி என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள், குறைந்தபட்ச கற்றல் திறனையாவது அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த வகுப்பில் அந்த திறன் நிறைவு செய்யப்பட்ட பின் , அடுத்த வகுப்பு பாடத்தை நடத்த வேண்டும்.(Minimum Learning Level) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


10. பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய கட்டிடம் இருப்பின், அதனை உடனடியாக இடிப்பதற்கு உரிய அலுவலர்களைத் தொடர்பு கொண்டு இடிக்கப்பட வேண்டும்.


11. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுடன் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இணைந்து, அந்தந்தப் பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களையும் , I T K-ல் சேர்த்து படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

எல்லா மாவட்டங்களிலும் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ITK -ல் சேராமல் உள்ளனர். இதில் கவனம் செலுத்தி முழுமையாக சேர்க்க வேண்டும்.

மொத்தத்தில் தமிழகத்தில் கல்வி நிலையை, அடுத்த நிலைக்கு உயர்த்த பாடுபட வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகளுடன்  அலுவலர்கள், பள்ளிகளில் இனி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive