ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்!
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று ( 4.3.2023 )
தலைமைச் செயலகத்தில் , தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் , தமிழக
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழகத் தமிழாசிரியர் கழகம் , தொடக்கப்
பள்ளி ஆசிரியர் மன்றங்கள் , ஜே.எஸ்.ஆர் . தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி , தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் , தமிழ்நாடு அரசு
ஊழியர் ஆசிரியர் நலக் கூட்டமைப்பு , டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி
ஆசிரியர்கள் சங்கம் , இடைநிலை பதிவு மூப்பு இயக்கம் , நேரடி நியமனம் பெற்ற
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் , தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர்
நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம் , தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் , தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரி
ஆசிரியர்கள் சங்கம் , தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி
ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து , அனைத்து இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் , அனைத்து
ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை ,
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000
ரூபாய் வரை உயர்வு , அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக
கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா போன்ற
திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர.. உடன் மாண்புமிகு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
உள்ளார்.
நல்ல அறிவிப்பு ஆசிரியர்களுக்கு
ReplyDelete