![]() |
| புவி நாள் |
அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல-
It is not wise to talk more.
இரண்டொழுக்க பண்புகள் :
*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.
* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.
பொன்மொழி :
எதை செய்ய வேண்டுமோ, அதை முழு கவனாத்துடன் செய்தால், எதை அடைய நினைக்கிறீர்களோ,அதை நிச்சயமாக அடையலாம்.
பொது அறிவு :
1. ஒரு தேனீக்கு எத்தனை கண்கள் உள்ளன?
விடை: ஐந்து கண்கள்.
2. எந்த விலங்கு இளஞ்சிவப்பு வியர்வையை விடுகிறது?
விடை: நீர்யானை
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
நிலத்தடி நீர் மாசுபடுவதால் கிடைக்கும் நன்னீர் நிரம்புவதும் குறைகிறது எனவே நிலத்தடி நீர் வளங்களை மாசுபடாமல் பாதுகாப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நீர்பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும்.
ஏப்ரல் 22
நீதிக்கதை
வைத்திய செலவு
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது.
வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில்உள்ள வட்டிகடைக்காரரைஅணுகினான். அதற்கு அவர்“பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.
தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் அவரும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் வட்டிகடைக்காரர் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையைவிற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாயவட்டி வாங்குபவருக்குபாடம் கற்பிக்க விரும்பினான்.
“சரி குதிரையை விற்று முழு பணத்தையும் உனக்கே தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்துஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.
போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.
சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து“உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்
அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான்இக்குதிரையைக் கொடுப்பேன்” என்றான்.
தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.
பின் வட்டிகடைக்காரருக்கு ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை அவர் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.
அதற்கு தெனாலிராமன் “ஐயா குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியேகுதிரையை 1 பவுனுக்கு விற்றது. அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே. இது என்ன நியாயம்” என்றான்.
அவரோ 500 பவுன் வேண்டுமென்றான் இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.
மன்னர் இவ்வழக்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்ததுசரியே என்று தீர்ப்புக் கூறினார்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...