10ம் வகுப்பு (SSLC Exam) பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தன.
மொத்த தேர்வர்கள்
பொதுத்தேர்வுகளை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்களும், 272 சிறைக் கைதிகளும் என மொத்தமாக 9 லட்சத்து 13 ஆயிரத்து 036 பேர் எழுதியுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி
மொத்தமாக 12 ஆயிரத்து 480 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதி உள்ளனர். இந்நிலையில், நிரப்பப்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
இன்று தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியை வருகின்ற 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...