துறைத்தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் விவரங்களை ஒருமுறைப் பதிவு
நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும் . அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை
கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க
வேண்டும் . பெயர் , தலைப்பெழுத்து , தகப்பனாரின் பெயர் , பிறந்த தேதி ,
பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் , முதலில்
ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்
பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க இறுதி
நாள் வரை . விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திருத்த
அனுமதிக்கப்படுவர் . இந்நிலையில் , ஏதேனும் ஒரு அல்லது பல தேர்வு
குறியீட்டு எண்ணிற்கு விண்ணப்பதாரர் விண்ணப்ப தொகையை செலுத்தியிருந்தால் ,
அந்த தேர்வு குறியீட்டு எண் அல்லது எண்களை அவர் நீக்கும் பட்சத்தில் ,
அதற்குரிய தேர்வுக்கட்டணம் திருப்பித்தரமாட்டாது . மேலும்
விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிப்பது யாதெனில் , விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்க இறுதி நாளிற்கு பின்னர் தேர்வுக் குறியீட்டெண் / தேர்வு மையம்
/ பெயர் / தந்தை பெயர் / வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற
கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது . எனவே , விண்ணப்பதாரர்கள் மிகுந்த
கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் .,








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...