Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Aadhar என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல - Supreme Court

 ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல - உச்ச நீதிமன்றம்

Aadhaar is not proof of citizenship - Supreme Court

ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர்களின் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

இந்த பணியில், ‘பிகாரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயர் இடம்பெற்றவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமனற்ம், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  பரிந்துரை செய்திருந்தது.

இது குறித்து பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive