Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ‘அதிருப்தி’யால் திமுக வாக்கு வங்கிக்கு சேதாரமா? - ஒரு பார்வை ( Today Hindu Tamil News )


IMG_20250821_123123 
திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அத்தகைய மகிழ்ச்சி உள்ளதா என்பது கேள்விக்குறிதான். அரசு ஊழியர்களின் அதிருப்திப் போக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை உருவாக்குமா என்று பார்ப்போம்.

கருணாநிதி ஆட்சி அமையும்போதெல்லாம் அரசு ஊழியர்கள் அகமகிழ்ந்து போவார்கள். தனது ஆட்சிக் காலத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அவர் தந்தார். இதன் காரணமாக எப்போதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பெரும்பான்மை ஆதரவு திமுகவுக்கே உண்டு.

அதே நம்பிக்கையில்தான் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை அரசு ஊழியர்கள் திமுகவை ஆதரித்தனர். திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதே சூட்டோடு ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தார் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சி கிட்டத்திட்ட நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனரா என்பதற்கான பதில், வாரம்தோறும் நடைபெறும் போராட்டங்களில்தான் உள்ளது.

அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், ரேஷன் ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் என பல்வேறு தரப்பு ஊழியர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வுபெற்றோரும் தங்களுக்கான பணப் பலன்கள் இன்னும் கிடைக்கவில்லை, முறையாக அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை என்று போராடி வருகின்றனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று தெரிவித்தது. எனவே, திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் அரசு ஊழியர்களின் அழுத்தம் அதிகரித்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தமிழக அரசு.

இந்த குழு தன்னுடைய அறிக்கையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இதுகுறித்து இருமுறை குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், இது கண் துடைப்பு நடவடிக்கை என்று பல அரசு ஊழியர் சங்கங்களும் சொல்கின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போதெல்லாம், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் அவற்றில் முழுமையாக பங்கெடுத்தது. ஆனால், இப்போது அங்கொன்றும், இங்கொன்றும் போராட்டங்கள் நடந்தாலும், காத்திரமான போராட்டங்கள் நடப்பதில்லை. இதற்கு காரணம், பல்வேறு முக்கிய அரசு ஊழியர் சங்கங்கள் திமுக மற்றும் இடதுசாரிகள் சார்புடையவை. எனவே அவர்கள் வலுவான போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர் என்கிறார்கள் சில அரசு ஊழியர் சங்கத்தினர்.

இதுகுறித்து பேசிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்​கிணைப்​பாளர் பிரெடெரிக் எங்​கெல்ஸ் கூறும்போது, “தமிழக அரசில் கால​முறை ஊதி​யத்​தில் பணிபுரி​யும் அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 1,98,331 பேர் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தி​லும், 6,24,140 பேர் புதிய ஓய்​வூ​தியதிட்​டத்​தி​லும் உள்​ளனர். சிபிஎஸ் திட்​டத்​தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்​றுள்​ளனர். 7,864 பேர் பணி​யின்​போது உயி​ரிழந்​து​விட்​டனர்.

2003-க்​குப் பின் பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம், பணிக்​கொடை எது​வும் கிடை​யாது. இதர மாநிலங்​களில் அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வு​பெறும் நாளில் இருப்​பில் உள்ள 40 சதவீத தொகைக்கு சந்தை மதிப்​புக்கு ஏற்ப ஓய்​வூ​தி​யம் கிடைக்​கும். பணிக்​கொடை மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் உண்​டு.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​து​விட்​டு, ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​களுக்கு மேலாகி​யும் கோரிக்​கையை நிறைவேற்​றாமல் இருப்​பது நியாயமல்ல. அடுத்த ஆண்டு ஏப்​ரல் அல்​லது மே மாதம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், அதற்கு முன் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். எங்​களுக்கு தேவை வாக்​குறுதி அல்ல, பழைய ஓய்​வூ​திய திட்​டத்​துக்​கான அரசாணைதான் வேண்​டும்” என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் கூறும்போது, “வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீ





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive