இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2025
Top 10 richest people in India
இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். 2025ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 8.15 லட்சம் கோடியுடன் இந்த இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 லட்சம் கோடியுடன் உள்ளார். இந்தியாவில் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சியை இந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. அதேபோல, இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 56ல் இருந்து 358 ஆக உயர்ந்துள்ளது. 1687 பேர், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்.
100 பேர் கொண்ட பட்டியலில் பணக்கார இந்தியர்களில் டாப் 10 லிஸ்டை இங்கு காணலாம்
1.முகேஷ் அம்பானி -9.55 லட்சம் கோடி ரூபாய்
2.கவுதம் அதானி- 8.14 லட்சம் கோடி ரூபாய்
3.ரோஷினி நாடார் - 2.84 லட்சம் கோடி ரூபாய்
4.சைரஸ் பூனாவாலா - 2.46 லட்சம் கோடி ரூபாய்
5.குமார் மங்கலம் பிர்லா - 2.32 லட்சம் கோடி ரூபாய்
6.நீரஜ் பஜாஜ் - 2.32 லட்சம் கோடி ரூபாய்
7.திலீப் சங்வி - 2.30 லட்சம் கோடி ரூபாய்
8.அசீம் பிரேம்ஜி - 2.21 லட்சம் கோடி ரூபாய்
9.கோபிசந்த் ஹிந்துஜா - 1.85 லட்சம் கோடி ரூபாய்
10.ராதாகிஷன் டமானி - 1.82 லட்சம் கோடி ரூபாய்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...