ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, பணியில் உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதன்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ஏற்கனவே பல ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு முரணானது. அவர்கள் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தனி விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பே, தமிழக ஆசிரியர்களின் எதிர்கால பணி நிலை, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்பு, மேலும் மாணவர்களின் கல்வித் தரம் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆசிரியர்கள் சார்பில், புதிய பணியமர்த்தலுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஏற்கனவே பணியாற்றி வரும் அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த சீராய்வு மனுவை தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...