Public Exam 2026
ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம்.
வேலூரை சேர்ந்த ரவீந்திரநாத் யாதவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
டேராடூன் ராணுவ கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இதற்கான தேர்வில் மாநில
அளவில் நான் முதலிடம் பிடித்தேன். ஆனால், எனது விலாசம் தவறாக உள்ளது என்று
கூறி தேர்வாணையம் என்னை தேர்வு செய்ய காலதாமதப்படுத்தியது. இதனால், எனக்கு
ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
JA காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை :3.7.2014 நிலவரப்படி 1395 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளது -இணை இயக்குநர்
ஆசிரியர் பணியிடம் நிரப்ப பாஜக செயற்குழு தீர்மானம்:
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம்,
செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட
தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர்
ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி
அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம்
ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில்
தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன:
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில்
தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு
முடித்தவர்கள் ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி
பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.
107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது 107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:
"தாட்கோ" மூலம் 7,50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது
"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து (05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்
மவுலிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு
மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இம்மாதம் இறுதியில் வண்ண அடையாள அட்டை வினியோகம் .....
தமிழகத்தில்,
வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை
வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.இது குறித்து, தமிழகத்
தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்ப்பு,சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரே
நாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
விண்ணப்பித்தனர்.
BE - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள்
பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம் - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள்.
முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு
அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை
அதிகப்படுத்துவதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த,
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1,090
ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306
மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை
அதிகப்படுத்துவது வழக்கம்.
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி
நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
அரசு யார் பக்கம்?
பணக்காரக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கக் கூடாதா?
கட்டாய இலவசக் கல்வித் திட்டம் அமலானவுடனேயே சென்னை
நகரத்திலிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் இப்படிச் சுற்றறிக்கை
அனுப்பினாராம்: “இனி உங்கள் பிள்ளைகள் உங்களது வேலைக்காரர்கள் பிள்ளைகளுடன்
சேர்ந்துதான் உட்கார வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழு!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்
அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன்
பின்னணி சுவாரஸ்யமானது.
பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம்!
சென்னை:
சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை
கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்,
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஆர்வம் காட்டினர்.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.
செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை
தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது.
கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி
பகுதி
நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட
கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு
தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு
நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு
பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு
20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு
தமிழகத்தில்
ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது.
ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்
பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்: 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கம்!
பல்லடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.
பி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது
பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.
டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு : கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்
தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள்
(டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்)
உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்
பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.






