Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை



           தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது. 

        அரசியல் மற்றும் கல்வியாளர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தற்போது மீண்டும் பள்ளிகளில் திரையிட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிக்கெட்டுகளை செய்தித் துறை அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஒரு நபருக்கு ரூ.10 என்ற விலையில் டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது.

         தியேட்டர் உள்ள நகரங்களில் மாணவர்கள் தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், தியேட்டர் இல்லாத ஊர்களில் பள்ளி வளாகத்திலேயே படம் திரையிடப்படும் என்றும் செய்தித் துறை அறிவித்துள்ளது. ஆனால், படம் திரையிடப்படும் தேதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.





1 Comments:

  1. கர்மவீரர் காமராசரின் திரைப்படத்தினை அவசியம் மாணவர்களின் பார்கைக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் ஐயா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive