Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வரலாற்றில் இன்று 25.11.2018

நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
1542 – ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.
1667 – கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
1703 – பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1758 – பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
1783 – கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் “ஏழாம் ஹாக்கோன்” என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
1936 – ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
1950 – மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1952 – அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
1992 – செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1844 – கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)
1952 – இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்
1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)
1974 – ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)
1979 – பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)
சிறப்பு நாள்
பொஸ்னியா ஹெர்செகோவினா – தேசிய நாள் (1943)
சுரிநாம் – விடுதலை நாள் (1975)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading