அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை இடித்த யானைகோவை, துடியலூருக்கு மேற்கே உள்ள பன்னிமடை கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தியது.
ஆனைகட்டி மலையடிவார கிராமங்களான சின்னத் தடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை ஆகிய கிராமங்களுக்குள் உணவுதேடி யானைகள் அடிக்கடி புகுவது வழக்கம். நள்ளிரவில் வரும் யானைகள் அங்குள்ள செங்கல் சூளைகளில் நுழைந்து குடிநீர்த் தொட்டிகளில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு குடியிருப்புகளைத் தகர்த்து உணவுப் பொருள்களையும் உண்டுவிட்டு செல்கின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பகுதிகளில் யானைகளினால் பெருத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க வனத் துறையினர் 4 கும்கிகளை வரப்பாளையம் கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு யானை தாக்கியதில் விஜயா என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், பன்னிமடை கிராமத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவு ஒற்றை யானை புகுந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தி மைதானத்துக்குள் நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர், பட்டாசுகளை வெடித்து யானையைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மிரண்ட யானை, பள்ளியின் மற்றொரு பக்கத்தில் உள்ள சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு ஓடியது. தொடர் முயற்சியினால் மீண்டும் அது வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டது
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive