NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்!

தமிழ்நாட்டில் தற்போதைய
நிலையில் சுமார் 5,10,000
அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர்.
 இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.
இதற்கு ஈடான அரசின் பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.
தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.
அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த _CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் _அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி  உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்.
மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான _ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்.
இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்.
எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்.
தமிழக மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இடையேயான இன்றைய (30.11.2018) பேச்சுவார்த்தையில் இது குறித்து  வலியுறுத்தப்படும் என பிரடெரிக் எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive