#அறிவியல்-அறிவோம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆபத்துக்களும்


(S.Harinarayanan GHSS Thachampet) .

பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆபத்துக்களும்-உஷார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.

புகையிலைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக, பதப் படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது உள்ளது. இது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

பாரீசில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை ஐந்து ஆண்டு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பிட்ட பெண்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10 சதவீதம் அதிகரித்தது என்றும், அப்போது கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை?

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் மற்றும் பன்கள்,மொருகலான நொறுக்குத் தீனிகள்,
இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள்,
சோடா மற்றும் குளிர்பானங்கள்,
இறைச்சி உருண்டைகள்
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள்
குளிர் பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி
சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க அதில் அளவுக்கு அதிகமாக சோடியம் கலக்கப்படுகிறது. இது இதய நோய்களுக்கும், சிறுநீரக பாதிப்புக்கும் காரணமாகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கும் இது துணை புரிகிறது. இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் காய்கறி, பழங்கள் சாப்பிடுவது குறைந்து போகிறது. அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்போம்!ஆரோக்கியம் காப்போம்.

Share this

0 Comment to "#அறிவியல்-அறிவோம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆபத்துக்களும்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...