பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.11.2018

திருக்குறள்


அதிகாரம்:செயந்நன்றியறிதல்

திருக்குறள்:108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

விளக்கம்:

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

பழமொழி

Example is better than precept

சொல்வதைக் காட்டிலும் செய்வது சிறந்தது

இரண்டொழுக்க பண்புகள்

¶ பிறரை குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்

¶ தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன் .

 பொன்மொழி

குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதற்கடமை,அவர்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே.

       - தாமஸ் கார்லைல்

பொதுஅறிவு

1.தாஜ்மகால் எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது?

 யமுனை

2. கோனார்க் சூரியக் கோயில் எங்கு அமைந்துள்ளது?

  ஒரிசா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சுண்டைக்காய்
1. சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது.

2. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

3. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

English words and meaning

Noble.   கம்பீரம்,உயர்ந்த
Nether.  அடியில்
Naught  இன்மை, பூச்சியம்
Naive.       கபடமற்ற

அறிவியல் விந்தைகள்

1. இழைகளின் இராணி - பட்டு

2. மருந்துகளின் இராணி - பென்சிலின்

3. மலர்களின் இராணி - ரோஜா

4. மலைகளின் அரசி - ஊட்டி

5. காய்கறிகளின் அரசி - வெங்காயம்

நீதிக்கதை

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

இன்றைய செய்திகள்

30.11.18

* கஜா புயல் பாதித்த பகுதிகளில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதியாக இருந்த கடைசித் தேதி தற்போது டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

* பூமியை துல்லியமாக கண்காணிக்கும் இந்தியாவின் ஹெச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். என்ற செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட், 31 வியாழக்கிழமை (நவ. 29) காலை 9.58 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

* ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிதாக வெளியிடப்பட உள்ள, 50 பவுண்டு மதிப்புள்ள நோட்டுகளில், பிரபல விஞ்ஞானியின் பெயர், படம் இடம்பெற உள்ளது. இதற்காக, இந்திய இயற்பியல் விஞ்ஞானி, சர் ஜகதீஷ் சந்திர போஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கருணாவை வென்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ளார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென்.

* ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

Today's Headlines

🌹The National Examinations Agency has announced that the deadline for the last date of November 30 to apply to the NEET examination  but in areas affected by the Ghaja storm has been extended till December 7.

🌹Along with HIVS of India, BSLV-C 43 rocket 31, launched on Thursday , November 29th at 9.58 am. which accurately monitors the earth

🌹The name of the famous scientist is to be featured in the newly released 50-dollar notes in the European nation, Britain. For this purpose, the name of Indian physicist Sir, Jagdish Chandra Bose has been nominated.

🌹Magnus Carlsson of Norway has won the world championship by winning Karuna in the final of the Chess World Championship.

🌹In the first league match of the Men's World Cup hockey team, the Indian team defeated South Africa for 5-0.🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive