பகுதிநேர ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு; தனியார் சான்றிதழ்கள் ஏற்கப்படுமா?

  பகுதிநேர கலையாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில், தனியார் நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்தவர்களின் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, காரமடை உள்ளிட்ட ஏழு வட்டாரங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும், 202 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.பள்ளிக்கல்வித்துறை வரையறுத்துள்ள, கலைப்பாடங்களுக்கான கல்வித்தகுதியை, ஆசிரியர்கள் முடித்துள்ளனரா என சரிபார்க்கப்பட்டது. இதில், ஓவியப்பாடப்பிரிவுக்கு அரசால் நடத்தப்பட்ட, ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் முடித்திருக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது.ஆனால், தனியார் நிறுவனங்கள் நடத்திய சான்றிதழ் படிப்பை முடித்தவர்களிடமும், கல்வி சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன

Share this

0 Comment to "பகுதிநேர ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு; தனியார் சான்றிதழ்கள் ஏற்கப்படுமா? "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...