ஒத்திவைத்த தேர்வுகள் 9ம் தேதி நடைபெறும்

சிதம்பரம்:கஜா புயல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் தேர்வுகள், டிச., 9ல் நடக்கின்றன.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள், கடந்த, 16ம் தேதி நடைபெற இருந்த நிலையில், கஜா புயல் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல், ஒத்திவைக்கப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில், அந்த தேர்வுகள், டிசம்பர் 9ல் நடைபெறும் என, பதிவாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Share this