Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வளர் இளம் பெண்களுக்கான வழிகாட்டுதல் - பெற்றோரிடம் விழிப்புணர் இல்லை

              வளர் இளம் பெண்களுக்கு, பெற்றோரின் வழிகாட்டுதல் மிக அவசியமாக உள்ளது. பெரும்பாலான பெற்றோரிடம் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் என மன நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

          குழந்தைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும். அதற்காக, நல்ல கல்வி நிறுவனங்களில், அவர்களை சேர்க்க வேண்டும் என்பதில், அக்கறையும், ஆர்வமும் காட்டும் பெற்றோர், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து செயல்படுவது, இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. சில பள்ளிகளில், மாணவியரிடம், சில ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்துகொள்வதும், அதன்பின், அவர்களை போலீசார் கைது செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

           பெற்றோருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் ஆசிரியர்களில் சிலர், பண்பை இழந்து, தரம் தாழ்ந்து நடப்பது, புனிதமான ஆசிரியர் பணியை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரியது. சினிமா, டிவி ஊடகங்களின் தாக்கமும், சமுதாய குளறுபடிகளும், வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியரை தடுமாறச் செய்கிறது.

           பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் நூறு சதவீத தேர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டிருப்பதால், மாணவ, மாணவியரின் வாழ்க்கை பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் கூர்ந்த பார்வை செலுத்துவதில்லை என்பது கசப்பான உண்மை. 

                    சில பெற்றோரும், காலை 6.00 மணிக்கும், இரவு 7.00 மணிக்கு பிறகும், டியூசன் படிக்க பிள்ளைகளை வெளியே அனுப்பி வைக்கின்றனர். அந்நேரங்களில், பஸ் ஸ்டாப்களில் தனிமையில் நின்றிருக்கும் மாணவியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியானதாக உள்ளது. பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரும் வாகனங்கள், அதன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்தும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு விவரம் தெரிவதில்லை; அதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமும், அவர்களிடம் இருப்பதில்லை.

            கல்வி ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "பொருளாதாரம் சார்ந்த தேடுதலில், இயந்திர வாழ்க்கை ஏற்படுத்திய அவசரத்தில், சில பெற்றோர்களுக்கு குடும்பத்தையும், தங்களது குழந்தைகளையும் கவனிக்க போதிய அவகாசம் இருப்பதில்லை. வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவியருக்கு வாழ்க்கை குறித்த கல்வி மிக அவசியமாகிறது. இதை ஆசிரியர்கள் வகுப்பில் பாடமாக மட்டுமே நடத்த முடியும். ஆனால், பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு வழிகாட்ட முடியும்.

           "பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனரீதியான மாற்றங்கள் குறித்தும், சமூக அவலங்கள் குறித்தும் தெளிவுபடுத்தி, அதன் விபரீத விளைவுகளை உணர்த்தி, அவர்களை எச்சரிக்க முடியும். பல பெற்றோர், அதைப்பற்றி சிந்திப்பதே இல்லை; பிள்ளைகளுக்கு, வழிகாட்டுவதும் இல்லை. கல்வியை காட்டிலும், குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாப்பு முக்கியம் என்பதில், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்" என்றார்.

குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்க...
மனநல டாக்டர் சக்திவேல் கூறியதாவது: வளர் இளம் பருவத்தை, "விடலை பருவம்" என்பர். 13 முதல் 19 வயது வரை, உடலுக்குள் ஏற்படும் ஹார்மோன் வளர்ச்சியால் அதிக உணர்ச்சி வசப்படுவர். எளிதில் கோபம் வரும். மற்றவர்கள் கூறும் அறிவுரை பிடிக்காது.

எதிலும் சுதந்திரமாக செயல்பட தோன்றும். அந்த வயதில், அவர்களை கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் அவசியம் என்றாலும், அது, வேறுவிதமான விளைவை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம். சில நேரங்களில் அதீத கண்காணிப்பும், கட்டுப்பாடும் பெற்றோரை விட்டு, பிள்ளைகள் விலகிச் செல்ல காரணமாகிறது.

              பருவ வயதில் ஏற்படும் மாற்றம், பலரது மனதுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தும்; அதை போக்குவதும் முக்கியம். பிள்ளைகளிடம், பெற்றோர், தினமும் அரைமணி நேரமாவது மனம் விட்டு பேச வேண்டும்; கருத்துகளை, உணர்வுகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். டிவி, சினிமா, இன்டர்நெட் போன்றவை, இளம் வயதினரின் பாலியல் உணர்வை அதிகமாக தூண்டுகிறது.
பருவ வயதில், பாலியல் கல்வி அவர்களுக்கு மிக அவசியம். முதலில், கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, தவறு நடந்தபின், அவர்களை கட்டுப்படுத்தி, பிரச்னையை தீர்ப்பது சாத்தியமில்லை. மன பதட்டம், மன உளைச்சல், மன சிதைவு, ஆளுமை திறன் பாதிப்பால் போதை பழக்கத்துக்கு, இளம் வயதில் மாணவர்கள் அடிமையாக வாய்ப்புள்ளது.

                     எதிலும் வெறுப்பு, தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளிடம் பெற்றோர் நல்ல நண்பர்களாக பழகி, அவர்களை வழிநடத்தினால், வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை, சிறந்த முறையில் உருவாக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive