NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.20 சம்பளத்தில் பகுதிநேர நூலகர்கள்

          வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும் மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதி நேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
             நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இத்துறையில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அதேபோல் 35க்கும் மேற்பட்ட முதல்நிலை ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

                     இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதி நேர நூலகர் பணியிடங்கள் என காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. பணிபுரிபவர்களுக்கு மனிதநேய சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கு எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை. 1800 பகுதி நேர நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் வேலை நாட்களில் மட்டும் தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை விடுமுறை வந்து விடுகிறது. எனவே இவர்களது மாதச்சம்பளமே 400 ரூபாய் தான். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும் அரசு ஊழியர்களை போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்து விட்டு தவிக்கின்றனர்.




1 Comments:

  1. கல்வித்துறைக்கு சம்பந்த பட்ட் இந்த நூலகத்தில் செல்வைகுறைக்க ஏன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை தினக்கூலியாக் ரூ20/- கொடுத்து பயன்படுத்தலாமே? பென்ஷ்னும் வாங்கி தினக்கூலி வாங்கி வேலை செய்ய சொல்லலாமே?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive