பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்

 
          தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தை வாரி வழங்கப் போகின்றன. மின்னணு கழிவுகளை எல்லாம், பணம் கொடுத்து வாங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

              'கிளீன் கேரளா கம்பெனி லிமிடெட்' என்ற, மாநில அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து, இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, பணம் கொடுத்து வாங்கப்படும், இந்தக் கழிவுகள், பாலக்காட்டை சேர்ந்த, 'எர்த் சென்ஸ் ரீசைக்கிள்' என்ற, தனியார் நிறுவனத்திடம், அது ஒப்படைக்கப்படும்.

அந்த நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள தங்கள் தொழிற்சாலையில், இந்த மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றும்.

மின்னணு கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், வேண்டாம் என, ஓரங்கட்டப்பட்ட கம்ப்யூட்டர்கள், 'டிவி'க்கள், மொபைல் போன்கள், ரேடியோக்கள், குளிர்

சாதன பெட்டிகள், கிரைண்டர்கள், டியூப் லைட்கள், சிஎப்எல் விளக்குகள் உட்பட, பல வித பொருட்கள், கிலோ ஐந்து ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்படும்.
1 Comments:

  1. விஷ்யம் என்ன என ஆராய்ந்ததில் ஜ.சி போர்ட்டு, சிம்கார்டுகளில் மேல் பக்கம் தங்க பூச்சு பூசப்பட்டுள்ளதால் பழைய்தை ரூ 5 க்கு வாங்கு பிரித்தெடுத்து விற்கவிலையை பார்த்து தங்க் முலாம் பூச்சை கெமிக்கல் மூலம் தனியாக பிரித்தெடுத்து தங்க ஆபரங்கள் செய்வதாக அறியபடுகிறது. அதனால் தான் ஜ்.சி சர்க்கியூட்கள் சிம் கார்டுகள் ஸ்டார்ங்காக உள்ளது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive