NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை பள்ளி ஆசிரியர்

         கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அருமனையை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். கத்தி படத்தில், கதாநாயகி சமந்தா தனது  விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல் நம்பர் கொடுக்கிறார். 
 
           விஜய் இந்த நம்பரை பலமுறை சொல்லி, சொல்லி வருவதாக காட்சி அமைந்துள்ளது. தொடர்ந்து, விஜய் இந்த நம்பரில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சி நம்பர் எனவும், தாங்கள் நாய்பிடிக்கும் பிரிவு எனவும், கூறுவது படத்தில் வேடிக்கையாகவும் உள்ளது.

அருமனை ஆசிரியர் நம்பர்

ஆனால், இந்த நம்பர் குமரி மாவட்டம் அருமனையை சார்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரின் செல் நம்பராகும். இவர் பல மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவனத்தில் இருந்து இந்த நம்பரை பெற்றுள்ளார். ஆனால், கத்தி படம் திரைக்கு வந்த அன்று முதல் இந்த ஆசிரியர் நிலைகுலைந்து போயுள்ளார். திரையரங்கத்தில் இருந்து கொண்டே ரசிகர்கள் போன் செய்து பேசுகிறார்கள்.

தனக்கு சம்பந்தம் இல்லாத போன் அழைப்புகளால் ஆசிரியர் செய்வதறியாது திகைத்து போய் உள்ளார். இவரோ திரைப்பட வாசம் குறைந்தவர். ஆனால் ரசிகர்கள் போன் செய்து, ‘தலைவா படம் சூப்பர்‘, என தொடங்கி தாங்கள் ஆர்வத்தையும், எதிர் கருத்துக்களையும் கூறிவருகின்றனர். பலரும் போனை எடுத்தவுடன், யார் என்று கேட்காமலேயே தங்கள் கருத்துக்களை கொட்டி தீர்க்கின்றனர். அடுத்தபடம் என்ன? எப்போது ரிலீஸ்? என்று கேட்டுக் கொண்டே விஜய்யிடம் பேசுவதாக குதூகலப்படுகின்றனர்.

400–க்கு மேல் மிஸ்ட் கால்

சிலர் இயக்குனர் முருகதாசிடம் பேசவேண்டும் என்று கேட்கின்றனர். சிலர் சமந்தாவிடம் பேசவேண்டும் என்று அடம்பிடிக்கின்றன. மேலும், மிக்சிங் எப்படி, சண்டை காட்சி, பாடல் என தொடங்கி கதை முழுவதும் ஓட்டுகின்றனர்.

ரசிகர்களின் போன் தொல்லையால் ஆசிரியர் போனை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே போட்டுவிட்டு செல்கிறார். மாலையில் வரும் போது 400–க்கு மேற்பட்ட மிஸ்ட் கால் காணப்படும். நிலமை உச்சத்துக்கு போகவே யாரிடம் சொல்வது என்று தவித்த ஆசிரியர் தனது ஓரிரு நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே சிங்கப்பூர், மலேசிய, தைவான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் ரசிகர்கள் அழைக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் பலர் சேர்ந்திருந்து அழைப்பது, கல்லூரி மாணவிகள், விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள், பிற பெண்கள் என பல அழைப்புகள் வருவதால் ஆசிரியர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், தனது தேவைக்கு போன் செய்ய முடியாத நிலையில் உள்ளார். போன் நம்பர் எப்படி தவறுதலாக வந்துள்ளது என்பதும் தெரியாதநிலையில் உள்ளது. இது சம்பந்தமாக இயக்குநர் முருகதாசை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




1 Comments:

  1. இந்த ஆசிரியருக்கு கத்தி ரூபத்தில் லாட்டரி லக் அடித்துள்ளது. சரியான் நேரம் இதுதான்; என் செல் நம்பரை ஏன் என்னை கேட்காமல் பய்ன்படுத்துகிறீர்கள் என்வும் எனக்கு அழைப்புகள் வந்து ம்ன் உளைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தில் குழப்ப்ம் ஏற்பட்டுள்ளதுஎன ஒரு வழக்கை பதிவு செய்து மான ந்ஷட ஈடாகவும் ஆசிரியரின் அரிய நேரத்தை வீணாக்கியதுடன் மாணவ சமுதாயத்திற்கு இடையூறு ஏற்படுத்திய தால் எனக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்து, வரும் தொகையை பணிபுரியும் பள்ளியின் பயிலும் மாணவர்களின் மேற்படிப்புக்கு ஊக்க்த்தொகையாக வழங்கியும், வெலையிழந்த வாடும் கணிப்பொறி பட்டதாரி ஆசிரியருக்கும், பாடசாலை வலைதளத்திற்கு ஒரு அதிக் தொகையும் அநாதை ஆசிரமம், முதியோர் இல்லம், த்த்துஎடுத்து செய்ல்படும் அறக்கட்டளைக்கு என பகிர்ந்து கொடுத்தும் கத்தாமல் இச்செயலை செய்ய்வும். எல்லோரும் அதிஷ்டம் வராது. இய்க்குனரைபார்த்து சரிகட்டாதே சார்?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive