உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்

ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்
         விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு வர உள்ளது.
           பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமா வதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
            இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத் தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம் இந்த விமானத் தில் பயணம் செய்யும் பயணிகள், இன்டர்நெட்டில் உலவிக் கொண்டே வான்வெளி யில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
              மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல் பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
            செல்போன்கள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்ப டுத்தப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஜன்னல் இல்லாத ஸ்மார்ட்ஸ்கிரீனை சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள்.
            சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை ‘வெளிப் புறத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய ஜன்னல்கள் இல்லாத கேபின்’ என கூறுகிறார்கள். ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்
          உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத 'டச் ஸ்கீரீன்' விமானம் விரைவில் வரவுள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது. பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த ஸ்கீரீனை டச் செய்து வானத்தை பார்க்கலாம். விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் குவாலிட்டியில் தெளிவாக விரும்பிய ஆங்கிளில் பார்க்க முடியும். மேலும், பயணிகள் தாங்களாகவே பிரைட்நெஸ் மற்றும் கான்ட்ராஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அதேபோல், அந்த திரையில் டிஜிட்டல் வால்பேப்பர்களும் தோன்றுகிறது. 
           ஓ.எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெல்லிய கண்ணாடி திரை எடை குறைந்ததும், நன்றாக வளையக்கூடியதுமாகும். இந்த திரையை பொருத்துவதால் விமானத்தின் எடையும் கணிசமாக குறைகிறது. எந்த ஒரு விமானத்திற்கும் எடை ஒரு பிரச்சனையாகவே இருக்கும். எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு விமானம் 80 சதவீத எடையை பிடித்துக் கொள்கிறது. விமானத்தின் எடை குறையும் ஒவ்வொரு சதவீதமும் 0.75 சதவீத எரிபொருளை சேமிக்கிறது. அந்த வகையில், இந்த டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும், செலவையும் குறைக்கும். தற்போதுள்ள கண்ணாடி ஜன்னல் திரைக்கு கடினமான பொருட்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், 35 ஆயிரம் அடி உயரத்தல் பறக்கும்போது ஏற்படும் காற்றின் அழுத்தத்தால் கண்ணாடி கீறிட்டு உடையாமல் இருக்க வேண்டும். ஆனால், புதிய டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தில் அப்படி எதுவும் தேவையில்லை. 
            சி.பி.ஐ. எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் சோதனைக்கு வரும் என ஆராயச்சியாளர் சைமன் ஓகியர் தெரிவித்தார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive