வேலைவாய்ப்பு : ஆன்லைன் மூலமாக உங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?

          தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
                  தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.

புதிதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

* புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.

* முதலில் டபுள்யூடபுள்யூடபுள்யூ.டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் (http://tnvelaivaaippu.gov.in/Empower/) என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேஷன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

* அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர்ஐடி என்ற இடத்தில் புதிதாக ஒரு ஐடி கொடுக்கவும்.

* பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும், இமேஜ் கோடு என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடுஐ கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.
* அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்தி செய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.

கவனிக்க 1:

குவாலிபிகேஷன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதே போன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.
கவனிக்க 2:

மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.
கவனிக்க 3:
ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை கான்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவனிக்க 4:
அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.
ரெனிவல் செய்வதற்கான விபரம்: உதாரணத்திற்கு, ரெஜிஸ்டர் நம்பர்: ஏஆர்டி2012 எம்00007502 (ரெஜிஸ்டர் நம்பர் இப்படித்தான் இருக்கும்)

      வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியீட்டு எண்: சியூடி-என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம் - கூடலூர்)
பதிவு செய்த ஆண்டு :2010

ஆண்/ பெண்: M/F

பதிவு எண்: 7802

          பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்து கொள்ளவும்.
யூசர்ஐடி: ஏஆர்டி2012எம்00007502

பாஸ்வேர்டு: டிடி/எம்எம்/ஒய்ஒய்ஒய்

             கடவுச்சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ஐடி கார்டு இப்படித்தான் இருக்கும். அவ்வளவு தான் நண்பர்களே... இனி கால விரையமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.
2 Comments:

  1. பத்தாண்டுகளுக்கு முன்னா் வந்த பழைய செய்தி. இருந்தாலும் பலருக்கு தொியாத ஒன்றுதான் . நன்றி

    ReplyDelete
  2. Gud Evening P..Salai Administrators, School Lab Assistant kana Employment Senioritya {SSLC and Higher Qualified Canditates } Thangalin Web Sitela Veli idalame? Kurippage Nagai Dist

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive