Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம்: ஐகோர்ட் கிளை தடை

          தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை  இடைக்காலத் தடை விதித்தது.
              திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கலெக்டர்கள், திட்ட அலுவலர்கள் நியமன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள 2013 ஆக.,28 ல் அரசு உத்தரவிட்டது. அதில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்,' என உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில் மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்? இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா? என்ற விபரங்களை தெளிவுபடுத்தவில்லை. பொது அறிவிப்பு வெளியிட்டுத்தான் அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போது நியமன நடைமுறையில் அதை பின்பற்றவில்லை. நேர்காணல் தேர்வுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல. நேர்காணலுக்கு முன்பே யார், யாரை நியமிப்பது என அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் அந்தந்த இடத்தில் வசிப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்பது, இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிரானது. அங்கன்வாடி பணியிடங்களை பொது அறிவிப்பின்றி, நேர்காணல், வசிப்பிடம் அடிப்படையில் தேர்வு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பொது அறிவிப்பு வெளியிடாமல், இட ஒதுக்கீடு பின்பற்றாமல் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். அரசு கூடுதல் வக்கீல் முகமது முகைதீன், "அரசாணைப்படி பொது அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை. தற்போது மாவட்ட அளவில்தான் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் நியமனத்திற்கு தடை கோர முடியாது,” என்றார். பணி நியமனம் மேற்கொள்ள தடை விதித்த நீதிபதி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர், சமூக நலத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive