Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி: 6 ஆண்டாக நியமனத்தில் சிக்கல்: தேர்ச்சி பெற்றவர்கள் தவிப்பு

          தமிழகத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆறு ஆண்டுகளாக பணியில் சேர முடியாமல் தேர்வு எழுதியவர்கள் தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
          டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 10.11.2008ல் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 22.3.2009ல் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் 8.9.2009ல் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில் 18.8.2009ல் தமிழக அரசு 'அரசாணை 107' வெளியிட்டது. இதன்படி 'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து விட்டு திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்றால் மட்டுமே அரசுப் பணி வாய்ப்பு, பதவி உயர்வு பெற முடியும்' என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த அரசாணை வெளியாவதற்கு முன்பே பிளஸ் 2 படிக்காமல், திறந்தவெளி முறையில் பட்டம் பெற்றவர்கள் 22.3.2009ல் நடந்த தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அவர்கள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டனர். ஆனால் தேர்வுக்கு பின் வெளியான 'அரசாணை 107' காரணமாக ஆறு ஆண்டுகளாக அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'திறந்தவெளி பல்கலை மாணவர்கள் (2008-2009) பட்டம் செல்லும். 
ஒரு பட்டம் செல்லுமா, செல்லாதா என்பதை யு.ஜி.சி., விதிகளின்படியே அளவிட முடியும். மாநில அரசின் அரசாணையை வைத்து முடிவு செய்ய முடியாது' என 21.4.2014ல் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் 22.3.2009 குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற பலருக்கும் பணிகள் ஒதுக்கவில்லை என்ற சர்ச்சை நீடிக்கிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: 'அரசாணை 107' வெளியிடுவதற்கு முன்பே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. நேர்காணலிலும் பங்கேற்றேன். நான் 17.11.2009ல் வெற்றி பெற்றதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. ஆனாலும் அரசாணை காரணமாக என்னை போல் 200க்கும் மேற்பட்டோரின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். சிலர் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ளவர் விவரம் குறித்து சேகரித்து பணிவாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




2 Comments:

  1. we also waiting from 2009 . we wrote the exam in 2009 for post of Physical Director for collegiate education . TNPSC released the list and conducted the oral test on 2010 but still final results not yet released. please help us purplish this message also

    ReplyDelete
  2. Last 5 years papers with solution for tnpsc group ii exam study material

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive