Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் நலச்சங்கங்களில் வெளிமாவட்ட ஆசிரியர்களின் உரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஆசிரியர்கள் நலமோடு வாழவும், அவசர தேவைகளுக்கு கடன்பெற்று செலுத்தவும். முக்கிய குறிப்பாக ஆசிரியர் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதே ஆசிரியர் நலச்சங்க் ஆனால் அதிலும் அரசியல்பூசல்கள் போல் உள் மாவட்ட ஆசிரியர், வெளிமாவட்ட ஆசிரியர் என பாகுபாடு பார்ப்பது மிக கொடுமையானது... 


கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம் ஆசிரியர் கூட்டுறவு நலச்சங்கத்தின் செயல்பாடு கேலிக்கூத்தானது மேலும் அங்கு வழங்கப்படும் வீட்டுக்கடன் போன்ற இதர சலுகைகள் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்க்கு மறுக்கப்படுவது தவறு ஏனெனில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தன் சொந்த மாவட்டங்களில் பணிநியமனம் கிடைப்பதில்லை....

பல ஆசிரியர்கள் புதிதாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் போது அந்தந்த ஒன்றிய ஆசிரியர்களின் நட்புறவு கிடைக்க காலதாமதம் ஆகலாம் . அச்சூழ்நிலையில் ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டுறவு நச்சங்கங்களில் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்ததில் வெளிமாவட்ட மற்றொரு ஆசிரியரின் ஜாமின் (செக்யுரிட்டி) இருந்தும் வெளிமாவட்ட ஆசிரியர் என்ற பாகுபாடு காரணத்தால்  வீட்டுக்கடன் மறுக்கப்படுகின்றன ..
ஆனால் உள் ஒன்றிய ஆசிரியராக இருந்தால் 6 மாத சந்தா தொகையையும் முண்தேதியிட்டு ஒரே சமயத்தில் கட்டி அரசினை ஏமாற்றி வீட்டுக்கடன் வழங்குவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளப்படும்.. உள்மாவட்ட ஆசிரியருக்கு ஒரு நீதி, வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு ஒரு நீதியா?? இத்தகைய செயல் ஆங்கிலேய அரசின் பிரித்தாலும் சூழ்ச்சியை விட மோசமானது .... 

மன்னரும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கிப்பார்ப்பின் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றார் அவ்வையார் ஆனால் இன்று கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களுக்கு வெளிமாவட்டங்களில் பணிபுரியும் போது ஆசிரியர் நலச்சங்கங்களில் உரிமைகள் மறுக்கப்படுவதை  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்  கண்டனத்தை தெரிவிப்பதோடு இத்தகைய பாகுபாடுகளை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மனு அளிக்க உள்ளது.

இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் 
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்.




2 Comments:

  1. இப்படி எல்லாமா நடக்குது ஸார்...

    ReplyDelete
  2. ஆசிரியர் நல (?) சங்கத்தின் தலைமையை நன்றாக " கவனித்தால் " எல்லா வளமும் ,சுகமும் பெற்று இன்புற்று வாழலாம் போல ...

    மானம் கெட்ட பிழைப்பு .....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive