NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய்!

           ந்தியா முழுவதும் எதிர்ப்பையும், விவாதத்தையும் உண்டாக்கிய நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையதள சமவாய்ப்பு தொடர்பாக, இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்களுடன் அதை பகிர்ந்து கொண்டவர்களின் இ-மெயில் முகவரிகளும் வெளியிடப்பட்டது சர்ச்சைக்கு இலக்காகி உள்ளது.
         இணையத்த்தில் எந்த ஒரு தளத்தையும் அல்லது சேவையையும் பாரபட்சமாக நடத்தாமல் இருப்பதற்கு வழி செய்யும் நெட் நியூட்ராலிட்டி எனும் இணையதள சமவாய்ப்பு தொடர்பாக டிராய் அமைப்பு, தொடர்புடைய அனைவரின் கருத்துக்களையும் கேட்டிருந்தது. இணைய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இணையவாசிகளும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இணையதள சமவாய்ப்பு தொடர்பான விவாதம் எழுந்தது. இணைய சமநிலை இல்லாவிட்டால் இணைய சேவை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உண்டாகும் என்றும், இணையவாசிகள் தஙகளுக்கு விருப்பமான இணையதளங்களை பார்க்கும் உரிமை பறிபோகும் என்றும் இணைய வல்லுனர்கள் எச்சரித்தனர்.

எனவே இணைய சமநிலைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு, இது மாபெரும் இணைய இயக்கமாகவும் உருவானது. இது தொடர்பாக எளிதாக கருத்து தெரிவிக்க சேவ்தி இண்டெர்நெட் எனும் இணையதளத்தில் வழி செய்யப்பட்டிருந்தது. இந்த இணையதளம் மூலம் லட்சக்கணக்கான இணையவாசிகள் மெயில் மூலம் கருத்துக்களை அனுப்பி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க கெடு விதிக்கப்பட்ட 24-ம் தேதிக்குள் பத்து லட்சம் மெயில்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இணையவாசிகளின் கருத்துக்கள், இணைய சேவை நிறுவனங்களின் கருத்துக்கள் உள்ளிட்டவற்றை பரிசீலித்த பின், டிராய் தனது பரிந்துரையை தொலைத்தொடர்பு துறையிடம் வழங்க உள்ளது.

இந்நிலையில், இதுவரை இணையதள சமவாய்ப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை டிராய் அமைப்பு, தனது இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்கள் 3வது பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்துக்களுக்கு பதில் கருத்து தெரிவிக்கலாம் என்றும், மே 8-ம் தேதி வரை இதற்கான அவகாசம் உண்டு என்றும் டிராய் தெரிவித்துள்ளது. பதில் கருத்துக்கள் பெறப்பட்ட பின் டிராய் தனது பரிந்துரையை இறுதி செய்ய உள்ளது.

இணையதள சமவாய்ப்பு தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இந்த கருத்துக்களுடன், அதை பகிர்ந்து கொண்டவர்களின் இ-மெயில் முகவரிகளும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான இணையவாசிகளின் இ-மெயில் முகவரிகளை பொதுவெளியில் வெளியிட்டதன் மூலம், அவர்கள் முகவரிகள் விளம்பர நிறுவனங்கள் கையில் கிடைக்க வழி செய்யப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் இணையவாசிகள், குப்பை மெயில்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட இணைய நிறுவன சேவை நிறுவனத்திற்கு எதிராக இவ்விவகாரத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது, அந்த நிறுவனத்தின் சேவையையே ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவரது இமெயில் முகவரி மூலம் அவர் யார் என்பதை அறிந்து அந்த நபருக்கான இணைய சேவையை அந்த நிறுவனம் துண்டிக்க வாய்ப்பு உள்ளது. 

கருத்துக்களை வெளியிட்டவரின் பெயரை குறிப்பிட்டதில் தவறில்லை என்றாலும், அவர்களின் இ-மெயில் முகவரி அடையாளம் தெரியாமல் மறைத்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரிலும் பலர் தங்கள் டிராயின் இந்த பொறுப்பற்ற தன்மை குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.




2 Comments:

  1. டிராய் வேண்டுமென்றே தான் இவ்வாறு செய்கிறது. பெரு நிறுவனங்கள். கார்பரெட் கம்பெனிகளுக்கு,குறிப்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு வழி ஏற்படுத்தி தருவதர்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.முந்தைய மத்திய அரசால் வருமானம் இழந்த தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு,தற்போதய அரசு உதவுகிறது.இதனால் பாதிப்படையப் போவது இனையத்தை பயன்படுத்தும் சாதாரன பொது மக்கள்தான்.இதனை கடுமையாக எதிர்க்காவிடில் வ்ரும் காலங்களில் இணைய செலவுகள் பன் மடங்கு அதிகரிக்கும்.

    ReplyDelete
  2. டிராய் வேண்டுமென்றே தான் இவ்வாறு செய்கிறது. பெரு நிறுவனங்கள். கார்பரெட் கம்பெனிகளுக்கு,குறிப்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு வழி ஏற்படுத்தி தருவதர்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.முந்தைய மத்திய அரசால் வருமானம் இழந்த தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு,தற்போதய அரசு உதவுகிறது.இதனால் பாதிப்படையப் போவது இனையத்தை பயன்படுத்தும் சாதாரன பொது மக்கள்தான்.இதனை கடுமையாக எதிர்க்காவிடில் வ்ரும் காலங்களில் இணைய செலவுகள் பன் மடங்கு அதிகரிக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive